வெகு நாட்கள் கழித்து புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க நேர்ந்தது .
ஒரு மணி நேர பயணத்தில் சில வறியவர்கள் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல எனக்கு. முதலில் வந்தவருக்கு ஒரு கால் இல்லை. சற்று நேரம் கழித்து வந்தவருக்கு கண் இல்லை...
இவர்களுக்கு பணம் ஈன்றால் புனியம் தரும் தானமா? உயிர் காக்கும் உதவியா? இல்லை இவரை போல் பலர் உருவாகுவதற்கு வித்தா? வாக்குரிமை இல்லாமையால் அரசியல் கட்சிகள் கவனிப்பது இல்லையா ?
இப்படி வழக்கமான என் மனதில் எழும் கேள்விகள் கடல் அலை போல் அடிக்க
அந்த எண்ண அலை ஓசையில் தூக்கமும் வந்தது...
'சமோஸா நாலு 10 ரூபாய்' தூரமாய் கேட்ட குரல் தாலாட்டாய் மாறியது. ரயில் சக்கரங்கள் இன்னும் பல கல் தூரங்களை கடந்து கொண்டு இருந்தது.
ஒரு சலசப்பு என்னை மீண்டும் முழிக்க வைத்தது. மற்றொரு ரயில் நிறுத்தத்தில் இருந்து பயணிகள் ஏறியதால் வந்த சத்தம் அது. அந்த கூட்டத்தில் ஒரு 40 வயது மதிக்க தக்க வடஇந்திய பெண் இரு பெண் குழந்தைகளுடன் உள்ளே வந்தாள்.
அவள் பெட்டியின் மையத்தில் தரையில் அமர, விளையாட்டு தனமாக பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடின. அவள் சங்கேத்தமாகவும், அவர் தாய் மொழியிலும் எதையோ தொடங்கும் படி பணித்தாள்.
அவள் கைபையில் இருந்த சிறு உலோக தட்டு மேளமகா மாறியதும், விளையாடி கொண்டு இருந்த பிள்ளைகள் தாளத்திற்கு நடைபோட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் சென்று நின்றனர்.
அந்த சிறுமி தன் இரு கைகளை கோர்த்துக்கொண்டு ஒரு வளையம் போல் செய்து, தானே அந்த வளையத்தினுள் சென்றதும் ஆச்சரியம், வியப்பு, அருவெருப்பு ஒருசேற என் முகத்தில் பளிச்சிட.... ஆட்டம் இன்னும் முடியவில்லை ஒரு சிறிய இரும்பு வளையம், அதில் முழு உடம்பையும் புகுத்தி வெளி வர என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.
அச்சிறுமியின் எலும்பும், மூட்டும் உறாயும் சத்தம் கேட்ட அதிர்ச்சியில் உறைந்து இருந்த பொழுதே மேளமாய் இருந்த தட்டு 'பிச்சை பாத்திரமாகியது'.
என்னை அறியாமல் என் பணப்பையில் இருந்து சில ரூபாய்கள் அந்த தட்டுக்கு இடம் பெயர்ந்தது. அடுத்த நிறுத்தமும் வந்தது. அப்பெண் குழந்தைகளுடன் அடுத்த பெட்டிக்கு தொடர்தாள்.
கண்களில் ஈரமுடன் சாளரத்தின் (ஜன்னல் ) வழியே தென்பட்டது ஒரு ஆலயம். கட்டுமான பணிகள் முடிந்து தெய்வ சிலைகள் போர்த்தி வைக்க பட்டு இருந்தது.
உன் பக்தர்கள் உன்னை போற்றி / போர்த்தி பாதுகாப்பதால் தான் நீ இந்த மக்களை பார்க்காமல் போனாயோ என்று கேட்க தோன்றியது.
மறுபடியும் அசதி என் கண் இமைகளை அழுத்த சிறுது அயர்தேன். மீண்டும் ஒரு கரம் என்னை தட்டி 'Brother, help பண்ணுங்க please' என்ன்றார் ஒரு திருநங்கை!!!

No comments:
Post a Comment